பிரபல தமிழ் நடிகைக்கு ரகசிய திருமணமா!!

 


பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் ’கயல் ஆனந்தி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்


மேலும் ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, ’கடவுள் இருக்கான் குமாரு’, ’மன்னார் வகையறா’, போன்ற படங்களில் நடித்த கயல் ஆனந்திக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக ’பரியேறும் பெருமாள்’ இருந்தது. இதனை அடுத்து ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த கயல் ஆனந்தி, தற்போது இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 7 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் கயல் ஆனந்திக்கு இன்று இரவு இரகசிய திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. சினிமா உலகினர் யாரையும் இந்த திருமணத்திற்கு அழைக்காமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மட்டும் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன


ஆனந்தியை திருமணம் செய்ய இருப்பவர் சாக்ரடீஸ் என்றும் கூறப்படுகிறது. இன்று இரவு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற பகுதியில் உள்ள நட்சத்திரன் ஓட்டலில் தான் கயல் ஆனந்தி திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.