வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா!


 வடக்கில் இன்று 11 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்குச் செல்வதற்காகக் கொழும்பில் தங்கியிருந்து திரும்பிய பூநகரியைச் சேர்ந்த 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதங்கேணியில் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் இருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

சங்கானை மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருதனார்மடம் கொரோனா கொத்தணியியுடன் தொடர்புயடைவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று 686 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.