கே.கே.எஸ். கடலில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!


 காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சுமார் 170 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்க இடமான படகொன்றை வழிமறித்த கடற்படையினர், படகைச் சோதனையிட்டுள்ளனர். படல் இருந்து கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகில் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.