யாழ். மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா தொற்று!


 யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துபீட மாணவன் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கற்கும் மாணவர் ஒருவருக்கே இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த இந்த மாணவன் விடுமுறையில் அங்கு சென்று கடந்த 26ஆம் திகதி பஸ்ஸில் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

இவர் விடுமுறையில் சென்ற சமயம் அங்கு நடந்த மரண வீடொன்றுக்குத் தாயாருடன் சென்றுள்ளார். அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று மாணவனுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் உணவு வாங்கச் சென்ற உணவகம் ஒன்று ஆனைப்பந்திப் பகுதியில் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.