ஐ.நா. நடுவுநிலை பேணவில்லை – வாசுதேவ கவலை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவை நடுவுநிலைத்தன்மையைப் பேணவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயல்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உரிய பொறிமுறையின் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைக் கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் செயல்படுத்தவில்லை.

மனித உரிமைகள் பேரவை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30- 1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவருக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோகச் செயல்பாடாகவே கருதப்பட வேண்டும்.

30 / 1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் அரசமைப்புக்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது 30/1 பிரேரணையிலிருந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகியது.

இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் சுயாதீனமான முறையில் எடுத்தது. பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும்.

உள்ளகப் பிரச்னையை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகிறார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எந்தவிதப்பயனும் கிடைக்கப் பெறவில்லை- என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.