பட்டதாரி மாணவன் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை!


 யாழ் உரும்பிராய் பகுதியில் பட்டதாரி மாணவன் ஒருவன் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருதனாமடம் ஆஞ்சனேயர் கோவிலில் கும்பிட்டுவிட்டு சகோதரருடன் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இருந்து வந்த மயூரன் எதிரே வந்த ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து விழுந்ததாகவும் தெரியவருகின்றது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த சகோதரனும் விழுந்து படுகாயமடைந்துள்ளார். 25 வயதான மயூரன் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டவர் எனவும் போதைப் பொருள்பாவனைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டுவர முயற்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.