தொல்லை கொடுத்த மகனை அடித்துக்கொன்ற தாய்!


 இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

இதனால் தினமும் குடிப்பதற்காக பணம் கேட்டு லட்சுமம்மாவை தொந்தரவு செய்து வந்ததுடன், திருமணம் செய்து வைக்கும் படியும் சண்டை போட்டு வந்துள்ளார்.

இப்படி தினமும் சிவபிரசாத் செய்து வந்ததால், முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த லட்சுமம்மா

சங்கா ரெட்டி மாவட்டம் திக்வேல் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய் தம்பி பூபாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதன் பின், தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் லட்சுமம்மா கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதன் படி கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி சிவபிரசாத்தின் தாய் மாமாவான பூபால் மது அருந்தலாம் என பிலாப்பூர் கிராமம் அருகே தனது மருமகனை அழைத்துச் சென்றார்.

அங்கு அனந்தராமன், பாக்கய்யாவுடன் சேர்ந்து சிவபிரசாத்தை மது அருந்த வைத்தார். அதிகமாக மது குடித்ததால் சிவபிரசாத் மயக்க நிலைக்கு சென்றார்.

இதற்காகவே காத்திருந்த பூபால் மற்றும் அவரது உறவினர்கள் சிவபிரசாத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.

இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல், லட்சுமம்மா தனது மகனை காணவில்லை என்று கடந்த மாதம் 7-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, தனது மகனின் தொல்லை தாங்க முடியாமல் லட்சுமம்மா தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்களை வைத்து பணம் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

பொலிசாரின் கிடுப்பிடு விசாரணைக்கு பின்னரே லட்சுமம்மா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் சிவபிரசாத் புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்று சோதனை செய்த போது, உடல் அழுகிய நிலையில் இருந்ததுள்ளது.

இதைத் தொடர்ந்து அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர்.

இதையடுத்து லட்சுமம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Blogger இயக்குவது.