நிறுத்தப்படுகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!


 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிய அனிதா- இந்த முறை சிக்கியது அர்ச்சனாவா?

இதனால் இவருடைய கதாபாத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது நடிகை காவ்யா இவரின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் பொங்கல் தினம் அன்று முடிவடைகிறது என்று தகவல்கள் கூறப்படுகிறது.

ஆம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஒரே குடும்பமாக அனைவரும் இணைந்து விட்டதனால், சீரியல் முடிவடைகிறது என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால், நாம் விசாரித்ததில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடவில்லை, நிறுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் யாரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவு வருகிறது என்று அதிர்ச்சியடைய தேவையில்லை என்று தெரிவிக்கிப்படுகிறது.

Blogger இயக்குவது.