‘கொவிட் டன்’ என்ற அறிகுறி பரவும் அபாயம்!


 கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு வெளிப்புறத்தில் காயங்கள், சிவந்த கொப்புளங்கள், சிவந்த புள்ளிகள் போன்றவை உருவாகும் என குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு எவரேனும் இந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களுக்கு மிக விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்குகூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.