புதிய ஒழுங்குடன் யாழ்.பல்கலையில் பட்டமளிப்பு விழா!!


 யாழ் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொரோனா நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது.


வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். எனினும் இம்முறை 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர்.


இந்நிலையில் கொரோனாப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது.


எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறை களுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.


வழமையாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறும் கைலாசபதி அரங்கில் இத்தடவை இடம்பெறாது. மாறாக, புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கில் தான் 35ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.


மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கொரோனா தொற்று நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வழமையாக மூன்று நாள்கள் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு விழா, இம்முறை 02 நாள்களில் நாள் ஒன்றுக்கு 03அமர்வுகள் வீதம் 06 அமர்வுகளில் நடத்தி முடிக்கப்படவுள்ளது.


மேலும் பட்டமளிப்பு விழா மண்டபம் மாற்றப்பட்டுள்ளமையால், மண்டபத்துக்கான நுழைவாயிலாக மருத்துவப் பீடத்தின் நுழைவாயில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.