கொரோனா காரணமாக 39 வயதானவர் மரணம்!


 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் இலங்கையில் இதுவரையில் 323 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 39 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீட்டிலேயே உயயிரிழந்துள்ளார்.

பொலனறுவை பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி குறித்த நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றியவருக்கு இரத்தம் விஷமாகி, உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றிமையினால் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.