போலி தடுப்பூசி மூலம் கொழுத்த லாபம் பார்த்த சீனர்கள்!


உலகில் உள்ள அந்த அனைத்து கண்டுபிடிப்புகளையும் கருவிகளையும் காப்பியடித்து டூப்ளிகேட் செய்வதில் சீனர்கள் கில்லாடி எனும் பேச்சு பரவலாக உள்ளது.

இந் நிலையில், தற்போது இதில் கூடவா டூப்ளிகேட் செய்வார்கள் எனக் கேட்கும் அளவுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸின் பரவல் குறித்து பல உலக நாடுகள் சீனா மீது கடுப்பில் உள்ள நிலையில், கொரோனாவுக்கான சீன தடுப்பூசிகளின் டூப்ளிகேட் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்தது.

அதன் ஒரு பகுதியாக, இதுவரை 80’க்கும் மேற்பட்டவர்கள் டூப்ளிகேட் தடுப்பூசிகளை கள்ளத்தனமாக கடத்தி வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தடுப்பூசி தொடர்பான குற்றங்கள் மீதான ஒடுக்குமுறையின் போது குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து 3,000 க்கும் மேற்பட்ட டூப்ளிகேட் கள்ள தடுப்பூசிகள் மீட்கப்பட்டதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெய்ஜிங் மற்றும் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மற்றும் ஷாண்டோங் மாகாணங்களில் போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் சீனாவின் பல நகரங்ககளிலும் தொடர்பு உள்ளதை அப்போது பொலிசார் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டூப்ளிகேட் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்ததன் மூலம் குற்றவாளிகள் லாபம் ஈட்டியதாக சீன ஊடகங்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் முன் நிரப்பப்பட்ட சிரிஞ்ச்களில் உமிழ்நீரை ஊசி மூலம் செலுத்தி டூப்ளிகேட் தடுப்பூசிகளை தயாரித்தார் எனக் கூறியுள்ள சீன ஊடகங்கள், இந்த டூப்ளிகேட் தடுப்பூசிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடத்தல்காரர்கள் ஆப்பிரிக்காவிற்கு போலி தடுப்பூசிகளை கடத்தியதாக நம்பப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எவ்வாறு சீனாவிலிருந்து கடத்த முடிந்தது என்று தெரியவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புழக்கத்தில் உள்ள போலி தடுப்பூசிகளின் அறிக்கைகள் குறித்து கேட்டதற்கு, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்,

கள்ள தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சீனா பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார். இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

சந்தைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் தடுப்பூசிகள் கைது செய்யப்பட நபர்களால் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த பொலிஸார் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பல முறை சோதனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், கடத்தப்பட்ட சீன தடுப்பூசிகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இருப்பினும், இந்த அறிக்கைகள் ஜப்பானுக்கான சீனத் தூதரகம், சரிபார்க்கப்படாத மற்றும் சீனாவுக்கு எதிராக தவறாக வழிநடத்தும் செயல் என விமர்சித்திருந்தது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு டூப்ளிகேட் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து சென்றது அம்பலமானதை அடுத்து, உண்மையை ஒப்புக்கொண்ட சீனா, டூப்ளிகேட் தடுப்பூசி உற்பத்தி மற்றும் கடத்தலுக்கு எதிராக தீவிர சோதனை நடத்தியுள்ளது.

இதற்கிடையே விஷயம் வெளியானதை அடுத்து, கடும் கண்காணிப்பு நிறைந்த சீனாவிலிருந்து அரசுக்கு தெரியாமல் இந்த கடத்தல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், சீன அரசே கூட இந்த சதியில் ஈடுபட்டு தற்போது விஷயம் வெளியானதால் நடவடிக்கை எனும் பெயரில் நாடகமாடுவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.