தடுப்பூசி அமைச்சர் சி. பி. ரத்நாயக்கவுக்கு செலுத்தப்பட்டது!


வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி. பி. ரத்நாயக்கவுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவ வைத்தியசாலையில் அவர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான இருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய நிலையில் சி. பி. ரத்நாயக்க, கடந்த சில மாதங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.