#P2P பேரணிக்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்பு போராட்டம்!

 தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி

நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் பொத்திவில் முதல் பொலிகண்டிவரை தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பதை வரைந்து காட்டியிருந்தார்கள் அதன் தீச்சுவாலையானது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் உணர்வுகளோடு கலந்து கொண்டு கனடா முதல் அவுஸ்திரேலியா வரையும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் கடும் குளிருக்கு மத்தியிலும் தனது பேராதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையொட்டி பிரான்சு மண்ணில் தமிழ் மக்களின் இதயத் துடிப்பான லாச்சப்பல் பகுதியில் இன்று 10.02.2021 புதன்கிழமை பி. பகல் 14. 30 மணி முதல் 16.45 வரை கடும் குளிருக்கும் மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டமானது தொடர்ந்தும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இங்கு நடைபெறவுள்ளதும். மார்ச் மாதம் ஐனீவா ஐ.நா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதே பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு எதிர்வரும் 13.02.2021 சனிக்கிழமை நண்பகல் 13.45 மணிக்கு மாபெரும் வாகனப்பேரணி (2 ஆவது ) ஆரம்பிக்கவுள்ளது. இப்பேரணியில் பிரான்சு வாழ் கலந்து தமது மிகப்பெரும் பங்களிப்பை செய்வதற்கு தயாராகின்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.