வடமராட்சி பகுதியில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் விழிப்புணர்வு!


கொவிட் தடுப்பு மருந்தேற்றலை ஊக்குவிக்க கிராமங்கள் மற்றும்  பாடசாலைகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் பாடசாலைகள் தோறும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் இணைந்து இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து அறுபது வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கும் தொடந்து முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி சமூகமட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

எனவே இதுகுறித்த சந்தேகங்களை பொதுமக்களிடமிருந்து நீக்கி சரியான தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்கி தடுப்பூசி ஏற்றலை வெற்றிகரமாக்குவதன் மூலம் சமூகத்தை கோவிட்டுக்கு பாதுகாப்புடையதாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதற்காக பாடசாலை மாணவர்களூடாக பெற்றோருக்கான தெளிவுபடுத்தல்களையும் ஆசிரியர்களுக்கு அறிவூட்டலும் வழங்கப்படுவதோடு சமூகமட்டத்தில் கிராமசேவகர் பிரிவு வாரியாகவும் இந்நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.