யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டல்!


யாழ் முத்திரை சந்தி செம்மணி வீதியில் போதையில் இளைஞர்கள் நின்று அந்த வீதியால் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர். 

சில நாட்களாக வீதி வழியே சென்று வந்த பயணிகளிடம் போதையில் நின்று இளைஞர்கள் சிலர் வழிமறித்து பணம் கேட்டு, கொடுக்க மறுத்த அவர்களை மிரட்டி உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு நின்ற ஓட்டோசாரதிகளை அவர்கள் அந்த இடத்திலிருந்து மிரட்டியதாகவும் தெரியவருகிறது.  

அவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் போதை பொருட்களை பயன்படுத்தி இருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது என்றும் சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து இவ்விடத்தில் இளைஞர்களின் சேட்டைகள் அதிகமாக இருப்பது அவ்வழியால் பெண்கள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.