கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது!


கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என கொரோனா ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் பயன்படுத்திய கழிவுநீர் பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் பாய்வதாக ரோஹன பண்டார தெரிவித்தார்.

தண்ணீர் மாசுபடும் என்பதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இலங்கையில் நிராகரிக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் பாயும் கழிவு நீரினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, கொரோனா தொற்று காற்று வழியாக மட்டுமே பரவுவதாகவும் நீர் வழியாக பரவவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் இயற்கை நீர்ருடன் இத்தகைய அசுத்தமான நீர் கலப்பது வேறு நோய்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்பதனால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.