இந்திய வம்சாவளி பெண் ஐ.நா-வின் முக்கிய பொறுப்புக்கு தேர்வு!


ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1966ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிதி அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பெண்கள், இளைஞர்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான நிதயுதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த நிலையில் ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக செயலாளராக இருந்து வந்த ஜூடித் கார்லு இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்.‌

இதையடுத்து நிதியத்தின் கவுரவம் மிக்க தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இவர் முதலீடு மற்றும் நிதி மேம்பாட்டுத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர் ஆவார். இதற்கு முன் இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எல்.எல்.பி. என்ற சிறப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

அதே போல் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தனியார்துறை சிந்தனை குழுவான யெஸ் குளோபல் இன்ஸ்டியூட்டின் நிர்வாக அதிகாரியாகவும் பிரீத்தி சின்ஹா பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.