சாணக்கியனே நீ நேற்று அரச விருந்தில், இன்றோ P2P-யில் ஏமாற்றாதே தமிழினத்தை; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!📸


 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி இன்று மதியம் மன்னார் நகருக்குள் சென்றடைந்த நிலையில் தற்போது மாங்குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதற்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து இன்று காலை வவுனியாவிற்கு குறித்த பேரணி வருகை தரும் நேரத்தில், இந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியை எதிர்த்து வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பு சில நபர்களுடனான குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் அவர்கள் எல்லா இடத்திலும் சுத்திக்கொண்டு வந்து வவுனியாவில் கொரோனாவை பரப்பாதீர்கள், அந்த நேரத்தில் இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேராமல் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு வரவாம், இந்த சாணக்கியன் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்கு அங்கிருந்துகொண்டு வந்து இங்க ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், யுத்தம் நடக்கும் போது இவர்கள் எங்கு சென்றார்கள், என கருத்து வெளியிட்டிருந்தனர்.

மேலும் சாணக்கியனே நீ நேற்று அரச விருந்தில், இன்றோ P2P-யில் ஏமாற்றாதே தமிழினத்தை, சாணக்கியன் புலிக்கு பயந்தவன் நடைப்பயணத்தில் கோடிகளை வாங்கியவன் கூட்டமைப்பில், இப்படிக்கு வன்னிமக்கள் என இப்படியான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.