மகனை தேடி அலைந்த மற்றொரு தாய் மரணம்!

 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளபட்டுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து காணாமலாக்கபட்ட தனது மகனை தேடி நீதி கோரி போராடி வந்த தாய் ஒருவர் (18) நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்ற தாயாரே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் மரணித்தள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார் கடந்த 2009 ஆண்டு இறுதி யுத்தத்த்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார்.

இன்றுவரை தனது மகனை தாயாரால் காணமுடியாத நிலையில் நீதி கேட்டு போராடிய நிலையில் இவ்வாறு மரணித்தள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

தமது உறவுகளுக்கு நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 75 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தந்தையர்கள் மரணித்துள்ள நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் (18.02.21)மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.