மந்திகை வைத்தியசாலை நோயாளிகளின் சிரம நிலை!

 


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் சிற்றுண்டிசாலை மற்றும் வாகன பாதுகாப்பு நிலையமும் இயங்காமல் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றார்கள்.  

கடந்த ஜனவரி 31ஆம் தேதியுடன் 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. புதிய ஒப்பந்தம் வழங்குவதற்காக கேள்வி விண்ணப்பங்கள் 2021 ஆம் ஆண்டுக்கான கோரலில் சென்ற வருடங்களிலும் பார்க்க இம்முறை கூடுதலான தொகையை ஒப்பந்தக்காரர்கள் இடமிருந்து எதிர்பார்த்தார்கள். ஒப்பந்தக்காரர்கள் அதிக தொகை காரணமாக எவரும் ஏலம்  எடுக்க முன்வரவில்லை என்று தெரியவருகின்றது. திரும்பவும் ஏலம் கோரப்பட்டுள்ளது. சிற்றுண்டிச் சாலையும் சைக்கிள் பார்க்கிங் நிலையமும் இயங்க முடியாமல் இருப்பதனால் நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை வெளிப்புறத்தில் விடுவதினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.  

நோயாளர்கள் சிற்றுண்டிச்சாலை உணவகம் இயங்காமையல் குடிநீர் மற்றும் சுடுநீர் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உணவகங்களை நாட வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் பார்க்க வருவோர் பலத்த சிரமங்களை எதிர்கொள்வதாக எமது நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார்கள். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகளைப் பார்க்க வரும் பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.