இலங்கை- இந்திய விமான சேவைகள் விரைவில் ஆரம்பம்!


இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவைகளை சுகாதார நெறிமுறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தன் ஊடாக வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பல யோசனைகளை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவிரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

மேலும் , ஏனைய சில நாடுகளுக்கும் விரைவில் விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.