இப்போது சுரேஸ் என்ன கூறப்போகிறார்?


சுமார் 45 திட்டங்களுக்காக 10 பில்லியன் டாலர் சீன முதலீட்டை அனுமதிக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் மின்சார திட்டத்திற்காக சீனக் கம்பனியை அனுமதித்தது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறிவரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போது என்ன கூறப்போகிறார்?

ஏற்கனவே இலங்கையில் பல திட்டங்களுக்கு சீன கம்பனிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றினால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இதுவரை வராத நிலையில் மூன்று தீவுகளில் சீனக் கம்பனியை அனுமதித்ததால்  இந்தியாவுக்கு ஆபத்து என்று ஏன் கூறுகின்றார் என்று புரியவில்லை.

அதுமட்டுமன்றி இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது. மேலும் செய்து வருகிறது. அப்படியிருக்க யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் காற்றாலை மின் திட்டத்திற்கு சீனக் கம்பனி முதலீடு செய்வது எப்படி இந்தியாவுக்கு ஆபத்தாகும் என சுரேஸ கருதுகிறார்  என்றும் புரியவில்லை.

அதுவும் சீன முதலீடு குறித்து இந்தியாவே கவலைப்படாத நிலையில் சுரேஸ் எதற்காக இந்தியாவுக்காக கவலைப் படுகின்றார் என புரியவில்லை.

டில்லி மருத்தவ கல்லூரியில் தன் மகளுக்கு படிக்க சீட் வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டவராக சுரேஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக பத்து கட்சிகளை சேர்த்து இந்தியாவுக்காக குரல் கொடுக்க வேண்டியதில்லை.

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை இனியாவது சுரேஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலன் சந்திரன் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.