ஐரோப்பாவில் புதிய கட்டுப்பாடுகளால் பொருளாதார வீழ்ச்சி!


கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வணிக சேவைத் துறையின் செயற்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.