பெண்களுக்கான கல்வி உதவித் தொகை பீகாரில் உயர்வு!


பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்தோடு பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான கல்வி உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பீகாரில் ஒரு கோடியே 60 இலட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.