ஈழ அகதி தூக்கில் பிணமாக தொங்கிய நண்பர் வீட்டில்!!
தமிழகத்தின் பெரம்பலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் இந்திரகுமார்(வயது 31). ஈழத்தைச் சேர்ந்த அகதியான இவருக்கு திருமணமாகி கவுரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
நேற்று முன்தினம் இரவு இந்திரகுமார், தனது நண்பர்களான வினோத் (31), மனோபாலன் (29) ஆகியோருடன் சேர்ந்து திரையரங்குக்குப் படம் பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் வினோத்தின் வீட்டிலையே இந்திரகுமார் தங்கியுள்ளார். இருவரும் தனித்தனி அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில், மறு நாள் காலை இந்திரகுமார், தங்கியிருந்த அறையில், சேலையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாகத் தொங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினோத், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து பெரம்பலூர் காவல்துறையினர் இந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்திரகுமார் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை