யாழ், முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் தீவிர குருதித் தட்டுப்பாடு!


வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் தீவிரமான குருதித் தட்டுப்பாடு நிலவுகிறது.

இயன்றவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட இரத்த வங்கிகளுக்கு உங்களுக்கு இயன்ற நேரத்தில் வருகை தந்து குருதிக் கொடையளிக்குமாறு தேசிய குருதிமாற்றுப் பிரயோக சேவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எமக்கு இன்றியமையாதது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் உங்கள் மனமுவந்து இந்தச் சேவையில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் தேசிய குருதிமாற்றுப் பிரயோக சேவையினர் மேலும் கூறியுள்ளனர்.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.