இலங்கைக்கு எதிரான பிரேரணை: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!


இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு மனித உரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அந்தனி ஜே ப்லிங்கென் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று காணொளித் தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற பல அட்டூழியங்களுக்கு இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தற்போது இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை ஆதரிப்பதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாக்க அமெரிக்கா எப்போதும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.