அரசியல் களத்தில் மகிந்தவின் இளைய புதல்வன்!


 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை தந்தை தேர்தலில் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறார்.

கடந்த நா்டாளுமன்ற தேர்தல் காலத்திலும் ரோஹித்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் தந்தைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் குருநாகல் கிரிபாவ கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

பிரதமரின் வழிகாட்டலில் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த கிராமத்தில் செருப்பு தயாரிக்கும் பெண்களின் கைத்தொழில் குறித்தும் ரோஹித்த ராஜபக்ஷ அவதானித்துள்ளார்.

மஹிந்த ராஜக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்றுள்ளதால் மஹிந்த குருநாகல் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தார்.

இரண்டாவது மகன் ​யோசித்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலக பிரதானியாக செயற்படுகிறார். தற்போது மூன்றாவது மகனும் குருநாகல் மாவட்ட களத்தில் பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.