ஆளும்தரப்பு திட்டவட்டம்!


 உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொறுப்பல்ல என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிக்கையில்,

ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை முழுமையாக நிராகரிக்கும் நபர்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

விசாரணை அறிக்கை குறித்து அதிகம் கதைப்பவர்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொறுப்புக் கூறத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை தேடி அவர்களுக்கு தண்டனை வழங்குவது எனவும் அதனை தவறாது அரசாங்கம் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.