ஸ்ரீலங்கா படையினருக்கு இந்தியா அளிக்கவுள்ள உதவி!


 கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினருக்கு தனியாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் உறுதி செய்துள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நாராஹென்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இந்தியாவின் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.