வெளிவந்தது பகிரங்க குற்றச்சாட்டு!

 


உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து,பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரே தீவிரவாதத் தாக்குதலை நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதற்கு முழுமையான பண உதவியை செய்தது அவன்காட் நிறுவனத் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதியே என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் ஊடாகவே ரணில்-மைத்திரி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கோட்டா-மஹிந்த அரசாங்கத்தினால் முடிந்ததாக குறிப்பிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகள் அவசியம் என்றும் கூறினார்.

எந்த தாக்குதல்களின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றினார்களோ, அதே நிலைமையில்தான் ஆட்சியையும் ராஜபக்ச குடும்பம் இழக்கும் என்றும் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் குடியுரிமையைப் பறிக்கவும் தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.