யாழ்.கஸ்தூரியார் வீதியில் வாள்வெட்டுக்குழு வன்முறை!


 யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த மூவர் கொண்ட குழு அங்கு தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்கள் உட்பட்ட கூரிய ஆயுதங்களுடன் சென்ற குழு வீட்டின் கண்ணாடி உட்பட்ட பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் உட்பட்ட வீட்டில் இருப்பவர்கள் மரண பீதியடைந்து காணப்பட்டதாக சம்பவத்தை அடுத்து அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கஸ்தூரியார் வீதியில் பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு முன்பான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.