தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 3,300 பேருக்கு வழக்கு!
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 3,335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 3300 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டின் எந்த பகுதிகளில் வசித்து வந்தாலும் , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்கமைய வீட்டைவிட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும்.
இந்த சட்டவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை