சீனாவிடமிருந்து நிதி பெறுவது ஏன்?

 சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெற முற்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் நிதியை (நாணய இடமாற்று அடிப்படை) வழங்குவதற்கு சீனா அனுமதியளித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கிய நாளிதழொன்றில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து மங்கள சமரவீர தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் தற்காலிகமான பொருளாதார மீட்சிக்காக சீனாவிடம் ஒரு பில்லியன் டொலர் நிதியைப் பெறவுள்ளது.

இது எதனடிப்படையிலான பெறுகை? அத்தோடு இதனை மீளச் செலுத்துவதற்குரிய காலப்பகுதி எவ்வளவு?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.