இந்திய மீனவர்களில் மேலும் 14 பேர் விடுவிப்பு!


 இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் மேலும் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதற்கமைய திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்கள்.

கடந்த புதன்கிழமை சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு , 5 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.