திரிபீடக பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!


 திரிபிடகத்தைப் பாதுகாப்பதற்காக திரிபீடக பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கும் , அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய  ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

1956 ஆம் ஆண்டு 2500 ஆம் ஸ்ரீபுத்த ஜயந்தி விழாவுக்கு இணையாக திரிபிடகம் சிங்கள மொழிபெயர்ப்புடன் அச்சிடப்பட்டுள்ளது.

திரிபிடக சாசனத்தை பாதுகாக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் திரிபிடகம் தேசிய மரபுரிமையாக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் அனுமதியின்றி அதனைப் பாதுகாத்தல், தவறான வரைவிலக்கணங்களை வழங்கல் அல்லது மொழிபெயர்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

 எதிர்கால சந்ததியினருக்காக திரிபிடகத்தைப் பாதுகாப்பதற்காக 'திரிபிடக பாதுகாப்பு சட்டத்தை' பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கான சட்டமூலத்தை தயாரிக்கவும், சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.