அரசாங்கம் மீது ஜே.சி.அலவத்துவல குற்றச்சாட்டு!

 அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளைப் பார்க்கும் போது புதுமையாக உள்ளது என ஐக்கிய மகக்ள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வெள்ளை வேன் கலாசாரம் இருந்தது இன்று மீண்டும் இந்த அரசாங்கம் வெள்ளை வேனைக்குப் பதிலாக கறுப்பு வின் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - எதுல் கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தவைலர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் விடயத்தினை தெரிவித்துள்ளார்

தென்னிலங் ஊடகமொன்றில் ஒரு பிள்ளை தன் வாழ்விடப் பிரதேசத்தைச் சூழ தன் கண்களால் கண்ட இடம்பெறும் காடழிப்பு சார்ந்த சுற்றாடல் பிரச்சினையை வெளிப்படுத்தி இருந்தார்.

அடுத்த தினமே அந்தப் பிள்ளையின் வீட்டுச் சென்று பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். இது வெட்கப்பட வேண்டிய விடயம். இந் நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு இன்று பாரிய சவால் ஏற்ப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பிரதேசங்களிலும் சட்ட விரோத மணல் அகழ்வு,கல் உடைப்பு மற்றும் காடழிப்பு என்பன வியாபாரத்தை நோக்காக் கொண்டு இடம் பெற்று வருகிறது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை மீளவும் வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சுற்றாடல் அமைச்சரும் இதை ஒப்புக் கொண்டார். இவ்வாறு இடம் பெறும் போது தன் வாழ்விடத்தைச் சூழ இடம் பெற்ற காடழிப்பு குறித்து உன்மையாக கூறிய போது அந்தப் பிள்ளைக்குப் பின்னால் சென்று வாக்கு மூலம் பதிவும் கீழ் தர நிலைக்கு இந்த அரசாங்கம் சென்றுள்ளது.

2015 க்கு முன்னர் வெள்ளை வேன் கலாசாரம் இருந்தது இன்று மீண்டும் இந்த அரசாங்கம் வெள்ளை வேனைக்குப் பதிலாக கறுப்பு வின் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது. சுஜீவ கமகே என்ற ஊடகவியலாளர் இவ்வாறு கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வீதியில் போடப்பட்டுள்ளார்.

இன்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் பின்னால் யார் உள்ளனர்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதை கண்டு கொள்ளாது உள்ளனர். நாட்டுல் சட்டவிரேத செயற்பாடுகள் இடம் பெற்ற வன்னமுள்ளன.

அண்மையில் அங்கங்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்ப்பட்டது. இன்று அதன் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையை காண்கிறோம் எனவும் அவர் மேலும் குற்றச்சாட்டியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.