தான்சானியா ஜனாதிபதி காலமானார்!


 தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபுலி  தனது 61 வயதில் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வதந்தி பரவியது.

“அன்புள்ள தான்சானியர்களே, இன்று 17 மார்ச் 2021 மாலை 06.00 மணியளவில் அறிவிப்பது வருத்தமளிக்கிறது. எங்கள் துணிச்சலான தலைவரான ஜனாதிபதி ஜான் மகுபுலி அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த டார் எஸ் சலாமில் உள்ள மெசெனா வைத்தியசாலையில் இதய நோயால் உயிரிழந்துள்ளார், "என அந்நாட்டு  துணை ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரின் மரணத்தை அடுத்து 14 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கவும் மற்றும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 27 முதல் மகுபுலி பொது வெளியில் தென்படவில்லலை. இதனால் அவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக  வதந்திகள் பரவியது. இதனை மார்ச் 12 அன்று அதிகாரிகள் மறுத்தனர். அவர் பதவியில் இருந்தபோது உயிரிழந்த தான்சானியாவின் முதல் ஜனாதிபதி ஆவார்.

கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகம் கொண்டிருந்தவர் மகுபுலி. தொழுகை மூலமும், மூலிகை வேது பிடிப்பதன் மூலமும் இந்த நோயை எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறிவந்தார்.

கணிதமும், வேதியியலும் படித்தவரான ஜான் முகுபுலி இந்த இரண்டு பாடங்களுக்குமான ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.