தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம்!


 தமிழ் மொழியை ஆட்சி மொழி, கல்வி மொழி, ஆய்வு மொழியாக அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்

அதில், 

• இட ஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம்  உயரும் வரையே இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 • அனைவருக்கும் மேடுபள்ளம் இல்லாத சமூக நீதி வழங்கப்படும்.

•  ஊழலற்ற, நேர்மையான விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி.

•  படிப்படியாக மது கடைகள் மூடப்பட்டு, முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

•  ஓராண்டில் ஆங்கில மொழிப் புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத, வசதி வாய்ப்புகள் வழங்கப்படும் 

• நீட் தேர்வுக்கு பதிலாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு சீட் ( SEET) தேர்வு நடத்தப்படும். 

• தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும், ஆராய்ச்சி மொழியாகவும் அறிவிக்கப்படும்.

• விவசாயம், தொழில் உற்பத்தி மற்றும் சேவை துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் வகையில் உறுதி செய்வோம். 

• மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும்.

• அரசு பாடசாலையில் வழங்கப்படும் கல்வி உலக தரத்தில் மேம்படுத்தப்படும்.

•  அடிப்படைக் கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலை கல்வி, 9 முதல் 10 வரை சீர்திருத்தம், மாணவர்களின் படிப்பு சுமை குறைக்கப்படும்.

• 1.3 கோடி பேருக்கு உலகத்தரம் வாய்ந்த தனித் திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

உள்ளிட்ட பதினெட்டு திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதை தவிர்த்து மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகிய ஐந்து கொள்கைகளை மக்கள் நீதி மையத்தின் அரசியல் கொள்கையாக பிரகடனம் செய்யப்படுகிறது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.