டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம்!


 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனது சொந்த தளத்துடன் சமூக வலைத்தளங்களுக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சமூக வலைத்தளங்களுக்கு திரும்புவதைப் பார்க்கப் போகிறோம் என நான் நினைக்கிறேன் என அவரின் ஆலோசகர் ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டிடத்தில் ஜனவரி மாதம் நடந்த வன்முறைகளுக்கு பிறகு ட்ரம்ப் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ம் திகதி நடத்திய தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்க ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை அசைத்தனர்.

பல நாட்களுக்குப் பிறகு, வன்முறையைத் தூண்டும் ஆபத்து காரணமாக ட்ரம்பின்  @realDonaldTrump என்ற டுவிட்டர் கணக்கு  "நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டது .

ட்ரம்பபிற்கு சமூக வலைத்தளத்தில் சுமார்  90 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.