விரைவில் சட்டத்தில் திருத்தங்கள் - பந்துல உறுதி!


 இணையத்தள வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக விரைவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியதாவது,

இணையத்தள வர்த்தகம் தொடர்பில் எமது நாட்டில் உரிய சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை.

2003ஆம் ஆண்டே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கடைசியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப இச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய மாற்றங்களை இந்தச் சட்டத்தில் செய்ய வேண்டியுள்ளது.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் நெல் கொள்வனவை சட்டவிரோதமாக மேற்கொள்கின்றனர். இதுதொடர்பில் உரிய சட்டத்திருத்தங்கள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ஆகவே, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தை புதிய உலகுக்கு ஏற்ப விரைவில் மாற்றங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.