தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

 


இன அல்லது மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படமாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பதிவுசெய்யப்பட்ட இன அல்லது மத பெயர்களுடன் தொடர்புடைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை திருத்துவதற்கும் ஆணைக்குழு தமது கவனத்தை செலுத்தவுள்ளது .

ஒரு இனம் அல்லது மதத்தின் பெயர்களைக் கொண்ட பல சிறுபான்மை அரசியல் கட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் தேர்தல்களின் நோக்கத்திற்காக ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.