இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தங்க சுரங்கம்!

 



இரத்தினபுரி - கிரிஎல்ல பகுதியில் உள்ள களு கங்கையில் இரத்தின சுரங்கத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தின மற்றும் நகை ஆணையம் இதை தெரிவித்துள்ளது.

பண்டைய காலங்களிலிருந்து, இலங்கை அதன் இயற்கை கனிம வளங்களால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

இரத்தினபுரி பகுதி இரத்தினங்களுக்கு புகழ் பெற்றதால், இந்த நகரம் ருவன்புர என்று பிரபலமாக அறியப்படுகிறது.

ஆனால் தற்போது இரத்தினபுரியில் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி - களு கங்கை - ஹூரனியாவக பகுதியில் கூட்டு இரத்தின சுரங்க திட்டத்தின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சுரங்கத்தில் பெறுமதி மிக்க இரத்தினம் உட்பட பல கற்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.