சொக்லேற் கனவுகள் 26- கோபிகை!!

 


பனியின் தூவல்கள்

புல்லின் நுனிகளில்

அழகாய் படிந்திருந்தன.

பூவரசம் பூக்களில்

வெண் சாமரம் போல

ஒட்டியிருந்தது பனித்துகள். 


ஓய்வு அறையில்

இருந்தான் ஆதி.

கைபேசியைப் பார்த்தவன்,

திரையை உயிர்ப்பித்தான்.


அவனும் அனுதியுமாய்

தாத்தா பாட்டியின் 

அருகிருக்க

மொத்த குடும்பமுமாய்

குறும்புத்தனமாய்

எடுத்த புகைப்படம்

ஒளிர்ந்தது திரையில்....


உதட்டில் புன்னகை அரும்ப

சில நாட்களின் முன்னான 

அந்தச் சம்பவம்

மனத்திரையில் ஓடியது

அவனுக்கு..... 


'அலைபேசி முகப்பில்

அனைவரும் 

குடும்பப் படம்தான் 

வைக்கவேண்டும்' 

என்பது

அந்தக் குடும்பத்தின்

எழுதப்படாத 

விதிகளில் ஒன்று. 


காதலைச் சொன்ன 

மறுநாளில்- ஆதி 

அனுதியின் 

வண்ணப்படத்தை

வைத்திருந்தான்

கைபேசி முகப்பில்.......


எதேச்சையாய் 

பார்த்துவிட்ட அனுதி, 

'ஏய்....என்னடா.....

என்னுடைய படம்?'

என்றாள் கோபமாய்.....


'ஏண்டி.......

நான் வைத்தால் என்ன'

அவனும் சற்றே

கோபமாய் கேட்க.....


'ஆதி......இனிமே 

இப்படிச் செய்யாதே.....

படத்தில கூட 

பிரித்துவைக்காதே'

என்றாள்

கண்கள் சற்றே 

கலங்க.....


'ஏய்....என்னாச்சுடா...'.

பரிவோடு 

கேட்டவனிடம்,

'நம் குடும்பம்தான்

நம் உலகம்....


எதற்காகவும் 

அவர்களின் மனதை

நோகடிக்கக்கூடாது,

படத்தை மாற்று'

என்றுவிட்டாள்.....


விளையாட்டுத்தனமான

அனுதிக்குள்ளிருந்த

பாசமும் பொறுப்பும்

அவனை நெகிழ்த்தியது.


அவளுக்கு அழைப்பை

எடுத்தவன் காத்திருந்தான்,

எதிர்முனையில் 

கலகலவென்றது

அவள் குரல்.....


'ஆதி.....நூறுவயசுடா

உனக்கு'

'ஓ......'; 

'நீ கூட இருந்தா, 

நூறென்ன 

இருநூறு வருசமும்

வாழத்தயார் தான்'

என்றபடி,

'ஏன் அப்படி....'

என்று கேட்டான். 


'இப்பதான்டா

உன்னை கூப்பிட 

நினைச்சேன்....

அதுக்குள்ள நீயே

கூப்பிட்டுவிட்டாய்'

என்றாள். 


சிரித்தபடியே

'ஏய் ஏஞ்சல் 

எங்க இருக்கிறாய்?'

என்றான் அவன். 


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.