பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!


 மகஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் சாரதியொருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமர்தனவிற்கு இச் சம்பவம் தொடர்பில் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக தெரியவரும் தகவல்களுக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.