யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
யாழ். மாநகரின் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடன் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தோடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனாலேயே யாழ். மாநகரின் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை