தமிழர்களை கடனாளியாக்கிய சஜித்!


தற்போதைய பிரதமர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கடந்த அரசில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பல்வேறு குடும்பங்கள் பலன் அடைந்தார்கள்.

ஆனால் வீட்டுத்திட்டத்தை பெற்ற பல குடும்பங்கள் இன்று கடன்காரராக உள்ளனர்.

சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கு சுமார் 1 இலட்சம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

புதிய வீடுகளை அமைப்பதற்காக தமது பழைய வீடுகளை அகற்றி வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தமது உடமைகளை அடகு வைத்தும், வங்கிகளில் கடனை பெற்றும் அதி கூடிய வட்டிக்கு பணத்தை பெற்றும் வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டே குறித்த வீட்டுத்திட்டம் அரசினால் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது குறித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய அரசு கூட பாதீக்கப்பட்ட மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினையை நிவர்த்தி செய்ய அக்கரை காட்டவில்லை.

தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த அரசாங்கத்தில் வழங்கியதன் காரனத்தினாலேயே தற்போதைய அரசாங்கம் அக்கரை காட்டவில்லை என தெரிகின்றது.

தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் வாய் திறக்க கஸ்டப்படுகின்றார்.

பல்வேறு விடயங்களை அவர் பாராளுமன்றத்தில் கதைத்தாலும் கூட வீட்டுத்திட்ட பிரச்சினையில் அவர் வாய் மூடி மௌனம் காக்கின்றார். இவ்விடையத்திற்கு அவரும் குரல் கொடுக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தை பெற்று கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களை ஒன்றிணைத்து மன்னாரில் முதல் கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வீட்டுத்திட்டத்தை பெற்று நிதி உரிய முறையில் கிடைக்காதவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.