திருமண வீட்டில் சுமந்திரன் - சாணக்கியன் அணியின் குத்தாட்டம்!


கடந்த வாரத்தில் மட்டக்களப்பில் இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரி நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புறக்கணித்ததாக பாதிக்கப் பட்ட மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அவரிடம் ஊடகவியலாளர்கள் போராட்டம் குறித்து கருத்துக் கேட்டபோது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வில்லாதவர்களையும் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியத்திற்குப் பல கசப்புணர்வுகளை ஏற்படுத்தியவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்த மக்களுக்கு இந்த சம்பவங்கள் மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட அரசியல் இலாப நட்ட கணக்கின் படி செயற்படும் போலித் தேசியமென்பது உண்மையில் கிழக்கில் தலைதூக்கி உள்ளதா? என்ற கேள்விகள் இன்று மீண்டும் எழத் தொடங்கியுள்ளது என பாதிக்கப் பட்ட மக்கள் ஆதங்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன் கூட்டமைப்பின் சுமன் அணி அவ் அறவழிப் போராட்டத்தை எதிர்த்ததன் வெளிப்பாடே இப் பின்னடைவிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் மட்டக்களப்பு போராட்டத்தை புறக்கணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு பருத்தித் தறை சென்று பின்னர் திருமண வீடுகளில் பாட்டிற்கு தாளம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.