வீழ்ந்தது இலங்கை

 


சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மேற்கிந்தியத்தீவுகள் தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 :1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.